/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் நகர ஊரமைப்பு அலுவலகத்தில் ' ரெய்டு '
/
திருவள்ளூர் நகர ஊரமைப்பு அலுவலகத்தில் ' ரெய்டு '
ADDED : அக் 15, 2025 11:13 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
திருவள்ளூர் ஆயில்மில் அருகே உள்ள நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வீடு கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரித்தல், வீட்டுமனைக்கான டி.டி.சி.பி., அங்கீகாரம் வழங்குதல் உட்பட, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகத்தில் நேற்று, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கணேசன் தலைமையில் அதிரடி சோதனை நடந்தது.
பிற்பகல் 2:00 முதல் இரவு 7:30 மணி வரை நடந்த சோதனையில், பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. முக்கிய ஆவணங்களை மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளதாக, திருவள்ளூர் நகர போலீசார் தெரிவித்தனர்.