/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் துாய்மை பணியாளர் படுகாயம்
/
பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் துாய்மை பணியாளர் படுகாயம்
பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் துாய்மை பணியாளர் படுகாயம்
பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் துாய்மை பணியாளர் படுகாயம்
ADDED : அக் 15, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்: துாய்மை பணியின்போது, மின்சாரம் பாய்ந்து பெண் துாய்மை பணியாளர் படுகாயமடைந்தார்.
திருவொற்றியூர், கல்யாணி செட்டி நகரைச் சேர்ந்த மீனாட்சி, 46; ஐந்து ஆண்டுகளாக, 'ராம்கி' ஒப்பந்த நிறுவனத்தில், துாய்மை பணியாளராக பணிபுரிகிறார்.
இவர், நேற்று மதியம், 11வது வார்டு, காலடிப்பேட்டை - மார்க்கெட் லேன் பகுதியில், சாலையோரம் துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.
பலத்த காயமடைந்தவரை, அங்கிருந்தோர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.