/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபர் மீது தாக்குதல் நால்வருக்கு வலை
/
வாலிபர் மீது தாக்குதல் நால்வருக்கு வலை
ADDED : அக் 15, 2025 11:12 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் அரிச்சந்திராபுரம் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ், 22. இவர், தனியார் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 50,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
சுரேஷ் கடன் பெறுவதற்கு, அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் சிபாரிசு செய்துள்ளார். இதில் சுரேஷ், 22,000 ரூபாய் கடனை திருப்பி செலுத்தியுள்ளார்.
மீதமுள்ள தொகையை யுவராஜை செலுத்துமாறு, தனியார் பைனான்ஸ் நிறுவனம் கட்டாயப்படுத்தியது. இதனால், சுரேஷ், யுவராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் யுவராஜ், அவரது உறவினர் ஆரோக்கிய மேரி, ரகுநாதன் மற்றும் நாகராஜன் ஆகியோர், சின்னம்மப்பேட்டை அருகே நடந்து வந்த சுரேஷை உருட்டு கட்டையால் தாக்கினர்.
இதில் காயமடைந்த சுரேஷ், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவாலங்காடு போலீசார், நால்வர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.