/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே கேட் பாதை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
/
ரயில்வே கேட் பாதை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
ரயில்வே கேட் பாதை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
ரயில்வே கேட் பாதை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
ADDED : அக் 19, 2025 10:25 PM

பொன்னேரி: அனுப்பம்பட்டு ரயில்வே கேட் பகுதியில் உள்ள பாதை கரடு முரடாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே, மேட்டுப்பாளையம் - திருவெள்ளவாயல் சாலையில் ரயில்வே கேட் உள்ளது.
இந்த ரயில்வே கேட் வழியாக தேவதானம், அக்கரம்பேடு, வேலுார் உள்ளிட்ட, 30 மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சென்று வருகின்றனர்.
ரயில்வே கேட் தண்டவாள பகுதியில் உள்ள பாதையில் பதிக்கப்பட்டிருக்கும் கான்கிரீட் கட்டுமானங்கள் மேடு, பள்ளமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.
சில இடங்களில் சேதமடைந்து, உள்ளிருக்கும் கம்பிகள் துருப்பிடித்து வெளியில் நீட்டிக் கொண்டிருக்கின்றன.
இவை, வாகனங்களில் சிக்கிக் கொள்வதுடன், நடந்து செல்வோரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ரயில்வே கேட் திறக்கும்போது, நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் வாகனங்கள், கரடு முரடான பாதையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. அதற்குள், மீண்டும் ரயில்வே கேட் மூடுவதற்கான எச்சரிக்கை வந்து விடுகிறது. இதனால், கடம் அவதிப்பட்டு வருகிறோம்.
இரண்டு மாதங்களாக இதே நிலை தான் நீடிக்கிறது. எனவே, ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.