/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புட்லுாரில் 4வது நடைமேடை வேண்டும் ரயில் பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள்
/
புட்லுாரில் 4வது நடைமேடை வேண்டும் ரயில் பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள்
புட்லுாரில் 4வது நடைமேடை வேண்டும் ரயில் பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள்
புட்லுாரில் 4வது நடைமேடை வேண்டும் ரயில் பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள்
ADDED : அக் 03, 2024 07:47 PM
திருவள்ளூர்:புட்லுார் ரயில் நிலையத்தில், புறநகர் மின்சார விரைவு ரயில்கள் நின்று செல்லும் வகையில், நான்காவது நடைமேடை அமைக்க ரயில்வே துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
புட்லுார் ரயில் பயணியர் சங்க நிர்வாகி ராகவேந்திர பட், தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனு:
அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை மற்றும் மாலை நேரத்தில், புறநகர் மின்சார விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
விரைவு ரயில்கள், திருவள்ளூரில் இருந்து திருநின்றவூர் இரண்டாவது ரயில் தண்டவாளத்திலும், பின் திருநின்றவூரில் இருந்து சென்ட்ரல் வரை நான்காவது தண்டவாளத்திலும் இயக்கப்பட்டு வந்தது.
இதனால், திருவண்ணாமலை - சென்னை சென்ட்ரல், திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் ரயில் எண்: 43222 மற்றும் அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் ரயில் எண்: 43410 ஆகிய புறநகர் மின்சார விரைவு ரயில் புட்லுாரில் நின்று சென்றன. இதனால், ஆயிரக்கணக்கான பயணியர் பயனடைந்து வந்தனர்.
தற்போது, திருநின்றவூர் நிலையத்தில் நான்காவது நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதால், புறநகர் மின்சார விரைவு ரயில்கள், தற்போது விரைவு ரயில் செல்லும் நான்காவது தண்டவாளத்தை பயன்படுத்தி வருகின்றன.
இதனால், புட்லுாரில் மின்சார விரைவு ரயில்கள் நிறுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புட்லுார் மற்றும் காக்களூர் தொழிற்பேட்டை பயணியரின் வசதிக்காக, நான்காவது ரயில் நடைமேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.