
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வெங்கல், தாமரைப்பாக்கம், வெள்ளியூர், பென்னலுார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
பேரண்டூர் பகுதியில் சாலை ஓரத்தி்ல இருந்த மரத்தின் கிளை பலத்த காற்றால் முறிந்தது. ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மரக்கிளைகளை அகற்றினர். வெள்ளியூரில் ஒரு வீட்டின் முன் பகுதியில் மரம் கீழே சாய்ந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முகாம்களில் தங்க வைப்பு
எல்லாபுரம் ஒன்றியம், செங்காத்தாகுளம் பகுதியில் தாழ்வான இடங்களில் வசித்த, 35 பேர் ஏரிக்குப்பம் தொடக்கப் பள்ளியிலும், பனயஞ்சேரி தொடக்கப் பள்ளியில், 9பேர், திருக்கண்டலம் அரசு தொடக்கப் பள்ளியில், 25 பேர்தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு சார்பில் உடை, உணவு வழங்கப்பட்டது.

