
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று அதிகாலை, 3:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை தொடர்ந்து துாறல் மழை பெய்தது.
இதையடுத்து காலை முதல் இரவு, 7:00 மணி வரை அவ்வப்போது பலத்த மழை பெய்தது. மீதமுள்ள நேரத்தில் மேகம் வாணமூட்டத்துடன் காணப்பட்டது. திடீர், திடீர் என, 20 நிமிடம் பலத்த மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக சாலையோர வியாபாரிகள், பூ பயிரிட்ட விவசாயிகள் கடும் சிரமப்பட்டனர்.