/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சின்னம்மாபேட்டையில் சூறைக்காற்றுடன் மழை 22 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு திருத்தணியில் 8 செ.மீ., பதிவு
/
சின்னம்மாபேட்டையில் சூறைக்காற்றுடன் மழை 22 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு திருத்தணியில் 8 செ.மீ., பதிவு
சின்னம்மாபேட்டையில் சூறைக்காற்றுடன் மழை 22 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு திருத்தணியில் 8 செ.மீ., பதிவு
சின்னம்மாபேட்டையில் சூறைக்காற்றுடன் மழை 22 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு திருத்தணியில் 8 செ.மீ., பதிவு
ADDED : மே 08, 2025 02:59 AM

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவூர், சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு, தொழுதாவூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது.
இதையடுத்து, மின்துறையினரால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சின்னம்மாபேட்டையில் மா, வேப்பம் உள்ளிட்ட பல மரங்கள் தெரு, சாலைகளில் விழுந்தன.
அதேபோன்று மணவூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன.
திருவாலங்காடில் விளைந்த நெற்பயிர் நீரில் மூழ்கியதுடன், சாய்ந்தது.
தொடர் மழை மற்றும் சூறைக்காற்றால் நேற்றுமுன்தினம் மாலை 6:00 மணி முதல் நேற்று மாலை 4:00 மணி வரை 22 மணி நேரம் சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், மணவூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
அதிகபட்சமாக திருத்தணியில் 8 செ.மீ., மழை பதிவாகியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம், 4ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் மாலை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதனால், வாழை, மாமரம், நெல் பயிர் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.
திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை, திருத்தணி சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முறிந்து விழுந்த மரங்களை உள்ளாட்சி நிர்வாகத்தினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
வினியோகம்
மேலும், மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்தும், மின் கம்பிகள் முறிந்ததால், மின்தடை ஏற்பட்டது. மின்வாரியத்தினர் அவற்றை சரிப்படுத்திய பின், நள்ளிரவு மின்சாரம் வினியோகித்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 8.1 செ.மீ., மழை பதிவாகியது. பள்ளிப்பட்டு 7, திருவள்ளூர் 2.7, பூண்டி 2.6, ஆவடி 2.4, திருவாலங்காடு 2.1 செ.மீ., மழை பதிவாகியது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் தேங்கியது.
- நமது நிருபர் குழு -