/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர்
/
பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர்
ADDED : நவ 23, 2025 03:20 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர்., படிவத்தை அளிக்க வந்தவர்கள் சிரமப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், திருவாலங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதுடன், சில பள்ளிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
நேற்று இரவு பெய்த கனமழையால், திருவாலங்காடு பி.டிஓ., அலுவலகம் எதிரே உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இப்பள்ளியில், எஸ்.ஐ.ஆர்., படிவம் பூர்த்தி செய்து தருவது, திருத்தம் செய்ய வருவோர் மற்றும் சந்தேகங்களை தீர்க்க முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வந்த 100க்கும் மேற்பட்டோர், வளாகத்தில் தேங்கிய மழைநீரால் கடும் சிரமப்பட்டனர். மேலும், பள்ளி நடைபெறும் நாட்களில் மழை பெய்தால் தண்ணீர் தேங்குகிறது. இதனால், மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காத படி, மண் கொட்டி சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

