/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவமனையில் 'தெராபெட்டிக்' பூங்கா திறப்பு
/
அரசு மருத்துவமனையில் 'தெராபெட்டிக்' பூங்கா திறப்பு
அரசு மருத்துவமனையில் 'தெராபெட்டிக்' பூங்கா திறப்பு
அரசு மருத்துவமனையில் 'தெராபெட்டிக்' பூங்கா திறப்பு
ADDED : நவ 23, 2025 03:19 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மேம்படுத்தப்பட்ட 'தெராபெட்டிக்' பூங்காவை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மத்திய - மாநில அரசு இணைந்து, குழந்தைகள் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும், 'மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையம்' செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில், பிறந்த குழந்தை முதல் 18 வயது உடையவர்களுக்கு, அவர்களது குறைபாடுக்கு ஏற்ப உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆறு விதமான சிகிச்சை அளிக்கும் வகையில், 'தெராபெட்டிக்' பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த 'தெராபெட்டிக்' பூங்கா திறப்பு விழா, மருத்துவக் கல்லுாரி முதல்வர் ரேவதி முன்னிலையில் நேற்று நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் பூங்காவை திறந்து வைத்து கூறியதாவது:
இம்மையத்தில், 2018 முதல் தற்போது வரை 17,693 பேர் பயனடைந்துள்ளனர். கூடுதலாக தமிழக அரசு, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதன் மூலம் மற்ற பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு, துணை முதல்வர் திலகவதி, இடையீட்டு சேவை மையத்தின் பொறுப்பாளர் மருத்துவர் ஜெகதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

