/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோழவரம் டோல்கேட்டில் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
சோழவரம் டோல்கேட்டில் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சோழவரம் டோல்கேட்டில் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சோழவரம் டோல்கேட்டில் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : டிச 13, 2024 02:21 AM

சோழவரம்:பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மழை பொழிந்து வருகிறது. சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது.
சோழவரம் அடுத்த, நல்லுார் பகுதியில், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அமைந்து உள்ளது. இதில், ஆந்திர மாநிலம் நோக்கி வாகனங்கள் செல்லும் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இதனால் அங்குள்ள மூன்று கவுன்டர்களை பயன்படுத்த முடியாமல், மீதமுள்ள மூன்று கவுன்டர்களில் மட்டும் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தடுமாற்றத்துடன் பயணித்தன.
இருசக்கரம் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட சிறு வாகனங்கள் டோல்கேட்டின் இடதுபுற கடைசி நுழைவாயிலை பயன்படுத்துவர். தற்போது அப்பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதால், மற்ற வாகனங்கள் செல்லும் பகுதியிலேயே இவையும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் கூடுதல் சிரமங்களுக்கு ஆளாகினர். ஒவ்வொரு மழைக்கும் டோல்கேட் பகுதியில், மழைநீர் குளம்போல் தேங்குவது வாகன ஓட்டிகளின் சிரமம் தொடர்வதுமாக இருக்கிறது. அதை தவிர்க்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்