/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் தேக்கம்
/
திருத்தணி அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் தேக்கம்
ADDED : அக் 25, 2025 02:22 AM

திருத்தணி: திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.
திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,400க்கும் மேற்பட்ட மாணவி யர் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகம் தாழ்வான பகுதி மற்றும் மழைநீர் வெளியே செல்வதற்கு வசதி ஏற்படுத்தாததால், ஒரு மணி நேரம் மழை பெய்தாலே, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம் முழுதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பள்ளிக்கு வந்த மாணவியர் வகுப்பறைக்கு செல்ல கடும் சிரமப்பட்டனர்.
மழைநீரை வெளியேற்ற, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

