sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மழைநீர் கால்வாய் பணி அரைகுறை வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்

/

 மழைநீர் கால்வாய் பணி அரைகுறை வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்

 மழைநீர் கால்வாய் பணி அரைகுறை வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்

 மழைநீர் கால்வாய் பணி அரைகுறை வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்


ADDED : பிப் 03, 2026 05:34 AM

Google News

ADDED : பிப் 03, 2026 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: மழைநீர் கால்வாய் பணிகள் அரைகுறையாக விடப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்.

பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட ரயில் நிலைய சாலை மற்றும் புதிய தேரடி சாலை சந்திக்கும் பகுதியில், மழைநீர் கால்வாய்க்கான பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக, 10 நாட்களுக்கு முன் ரயில் நிலைய சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இந்த பள்ளத்தில் மழைநீருடன், கழிவுநீர் தேங்கியுள்ளது.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளம் வெட்டப்பட்ட பகுதியை தவிர்த்து, எஞ்சியுள்ள குறுகலான சாலை வழியாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

பொன்னேரி அரசு மருத்துவனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றன. ரயில் நிலையம் செல்லும் பயணியரும் அவதிப்பட்டுவருகின்றனர். அரசு பேருந்துகள், ஆம்புலன்ஸ் வந்து செல்லும்போது, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அரைகுறை கால்வாய் பணிகளால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us