/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் 15 நாட்களாக தேங்கி சகதியாக மாறிய மழைநீர்
/
நெடுஞ்சாலையில் 15 நாட்களாக தேங்கி சகதியாக மாறிய மழைநீர்
நெடுஞ்சாலையில் 15 நாட்களாக தேங்கி சகதியாக மாறிய மழைநீர்
நெடுஞ்சாலையில் 15 நாட்களாக தேங்கி சகதியாக மாறிய மழைநீர்
ADDED : ஜன 05, 2025 02:04 AM

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில், கவரைப்பேட்டை முதல், திடீர் நகர் வரையிலான சாலை, சில மாதங்களுக்கு முன் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
அந்த சாலையில், குருத்தானமேடு கிராமத்தில், சத்தியவேடு சாலையோரம், மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி, 15 நாட்களாக தேங்கி நிற்கிறது.
அருகில் உள்ள மேல்முதலம்பேடு ஏரிக்கரை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள கழிவுடன் மழைநீர் கலந்து கழிவுநீர் சகதியாக மாறியுள்ளது. இதனால், சுகாதாரமான சூழல் நிலவுவதுடன் சாலை சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் சாலை குறுகியதால், அனைத்து வாகனங்களும் மீடியனை ஒட்டி பயணித்து வருகின்றனர். இரவு நேரத்தில், டூ - -வீலர்கள் கழிவுநீர் சகதியில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
போக்குவரத்திற்கு பாதிப்பு இன்றி உடனடியாக அதை அப்புறப்படுத்தி, மழைநீர் வடிந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

