/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே சுரங்கப்பாதையில் 5 நாளாக வடியாத மழைநீர்
/
ரயில்வே சுரங்கப்பாதையில் 5 நாளாக வடியாத மழைநீர்
ADDED : நவ 21, 2024 12:37 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே பஜார் பகுதியையும், பைபாஸ் பகுதியையும் இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக, தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. மழை நின்று ஐந்து நாட்களை கடந்தும், மழைநீர் வடியாமல் உள்ளது.
இதனால், பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துடன் கடந்து வருகின்றனர். பலர், வாகனம் பழுதாகுமோ என்ற அச்சத்தில், 4 கி.மீ., சுற்றி செல்கின்றனர். அவசரத்திற்கு கூட சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக சுரங்கப்பாதையில் மழைநீர் வெளியேற்ற வழிவகை செய்ய வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.