/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி சிப்காட் சாலையில் குளம் போல் மழைநீர் தேக்கம்
/
கும்மிடி சிப்காட் சாலையில் குளம் போல் மழைநீர் தேக்கம்
கும்மிடி சிப்காட் சாலையில் குளம் போல் மழைநீர் தேக்கம்
கும்மிடி சிப்காட் சாலையில் குளம் போல் மழைநீர் தேக்கம்
ADDED : ஆக 18, 2025 11:37 PM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி சிப்காட் நுழைவாயில் முகப்பு பகுதியில் உள்ள சாலையில், குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப் பட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சிப்காட் வளாகத்திற்குள் வந்து செல்கின்றன.
சிப்காட் நுழைவாயில் அமைந்துள்ள பிரதான சாலையின் முகப்பில், சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக பெய்து வரும் மழையால், பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கிறது.
இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பள்ளம் மேலும் விரிவடைந்து அபாயகரமாக மாறக்கூடும் என, வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, 'பள்ளத்தை சீரமைத்து, மழைநீர் தேங்காதபடி பராமரிக்க வேண்டும். அதற்கு, கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வாகன ஓட்டிகள் வேண் டுகோள் விடுத்துள்ளனர்.