/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் அவஸ்தை
/
சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் அவஸ்தை
ADDED : அக் 11, 2024 02:03 AM

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் ---- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அருகே சின்னம்மாபேட்டை உள்ளது. இங்கு, திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளதால், இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இச்சாலை வழியாக தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. சின்னம்மாபேட்டை நான்குமுனை சந்திப்பில், சாதாரண மழை பெய்தாலே தண்ணீர் தேங்குகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் அபாயம் உள்ளது. மழைநீர் தேங்குவதால், ஒருபக்க சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, அவ்வப்போது, சிறு சிறு விபத்து நடக்கின்றன.
எனவே, மழைநீர் தேங்கும் நெடுஞ்சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.