/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜல்லிக்கற்கள் பெயர்ந்த ராஜபத்மாபுரம் சாலை
/
ஜல்லிக்கற்கள் பெயர்ந்த ராஜபத்மாபுரம் சாலை
ADDED : ஜன 17, 2025 02:19 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ராஜபத்மாபுரம் --- தொழுதாவூர் வரை, 2 கி.மீ., மண் சாலையாக இருந்தது. பழையனுார், ஜாகீர் மங்கலம், ராஜபத்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தோர், அத்தியாவசிய தேவைகளுக்கு சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு ரயில் நிலையம் செல்ல, இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
அதிக பயன்பாடு உள்ள இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தியதை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், ஒன்றிய பொது நிதியில் 27 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜல்லி, மண் கொட்டப்பட்டு, மெட்டல் சாலை அமைக்கப்பட்டது. தற்போது மண்,
ஜல்லி பெயர்ந்து, பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இச்சாலையை பயன்படுத்தும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளதுஎனவே, சேதமடைந்த மெட்டல் சாலையை, தார் சாலையாக உயர்த்தி சீரமைக்க வேண்டும் என, வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.