/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரும் 10ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள்
/
வரும் 10ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள்
ADDED : மே 08, 2025 02:21 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம், நாளைமறுதினம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம், நாளை மறுதினம் நடக்கிறது.
வட்ட அளவில் நடைபெறும் அந்த குறைதீர் முகாமில், பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம்.
மேலும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் 'அந்த்யோதயா அன்ன யோஜனா' குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், அக்குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
எனவே, இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில், வரும் 23ம் தேதிக்குள் தங்களது விரல் ரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

