/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்
/
ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்
ADDED : நவ 06, 2025 09:36 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுதாரர் சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் அறிவுரைப்படி, பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை, ஒவ்வொரு வட்டத்திலும், பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 9 வட்ட வழங்கல் அலுவலகத்திலும் நாளை, 8ம் தேதி குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் சிறப்பு முகாம் நடக்கிறது.
மக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும், முன்னுரிமை குடும்ப அட்டை, அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டை வைத்திருப்போர், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல்ரேகையை, ரேஷன் கடைகளில் வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

