/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி அரசு மருத்துவமனைக்கு பேட்டரி வாகனம் இயக்க கோரிக்கை
/
கும்மிடி அரசு மருத்துவமனைக்கு பேட்டரி வாகனம் இயக்க கோரிக்கை
கும்மிடி அரசு மருத்துவமனைக்கு பேட்டரி வாகனம் இயக்க கோரிக்கை
கும்மிடி அரசு மருத்துவமனைக்கு பேட்டரி வாகனம் இயக்க கோரிக்கை
ADDED : நவ 06, 2025 09:36 PM
கும்மிடிப்பூண்டி: பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை வரை, பேட்டரி வாகனங்கள் இயக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் கோட்டக்கரை அண்ணாநகர் பகுதியில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோக்களில் வரும் நோயாளிகள், ஜி.என்.டி., சாலையில் உள்ள கோட்டக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து, 400 மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
குறிப்பாக கர்ப்பிணியர் மற்றும் முதியவர்களின் நலன் கருதி, பேருந்து நிறுத்தத்தில் இருந்து மருத்துவமனை வரை பேட்டரி கார்கள் இயக்க கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.