/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கவிழ்ந்த வாகனத்தில் ரேஷன் அரிசி சிக்கியது
/
கவிழ்ந்த வாகனத்தில் ரேஷன் அரிசி சிக்கியது
ADDED : ஏப் 21, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் வழியாக, ஆந்திரா மாநிலம் நோக்கி, நேற்று மாலை 'தோஸ்த்' சரக்கு வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. அரும்பாக்கம் சந்திப்பு அருகே சென்ற போது டயர் வெடித்து, சாலையோரம் கவிழ்ந்தது. அதன் ஓட்டுனர் தப்பியோடினார்.
ஆரம்பாக்கம் போலீசார் வாகனத்தை சோதனையிட்ட போது, அதில், 1 டன் எடையிலான ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. வாகனத்துடன் அரசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.