/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தங்கும் இடமாக மாறிய ரேஷன் கடை கட்டடம்
/
தங்கும் இடமாக மாறிய ரேஷன் கடை கட்டடம்
ADDED : ஏப் 03, 2025 02:38 AM

கொண்டஞ்சேரி:கடம்பத்துார் ஒன்றியம் கொண்டஞ்சேரி ஊராட்சியில், கடந்த 2023 - 24ம் ஆண்டு அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம சேவை மையம் அருகே, 3.16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கடையை, கடந்த ஜனவரி மாதம் திறப்பு விழா நடத்தியும், பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடந்தது. இந்நிலையில், தற்போது பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம், வடமாநில தொழிலாளர்கள் தங்கும் இடமாக மாறியுள்ளது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ரேஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.