ADDED : ஏப் 23, 2025 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி கமலா தியேட்டர் அருகே, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், 20க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் பங்கேற்று, விரல்ரேகை பதிவு செய்தல், ஆதார் சரிபார்ப்பு, ரேஷன் கடைகளுக்கு நவீன தராசுகள் வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை உட்பட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

