/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கன்னங்காரணியில் கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
/
கன்னங்காரணியில் கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
கன்னங்காரணியில் கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
கன்னங்காரணியில் கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
ADDED : ஏப் 12, 2025 01:10 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கன்னங்காரணி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராமவாசிகள், தமிழக அரசு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கும், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்க, 2 கி.மீ., துாரத்தில் உள்ள பாண்டூர் கிராமத்திற்கு வந்து செல்ல வேண்டும்.
வயதானோர், பெண்கள் நீண்ட துாரம் பொருட்களை சுமந்து வர முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து, அங்கு பகுதிநேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது. அந்த கடையும் பழுதடைந்து விட்டதால் இடித்து அகற்றப்பட்டது.
இதையடுத்து, கன்னங்காரணி கிராமவாசிகள், ரேஷன் பொருட்கள் வாங்க, மீண்டும் பாண்டூர் கிராமத்திற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், 2022 - 23ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 12.30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. கட்டி முடித்து ஓராண்டுக்கு மேலாகியும், தற்போது வரை ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளது.
தற்போது, கோடை வெயில் கொளுத்துவதால், கன்னங்காரணி மக்கள் பாண்டூர் கிராமத்திற்கு சென்று ரேஷன் பொருள் வாங்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே, கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடையை, உடனடியாக திறந்து வைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

