/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் தண்டவாள பாதையில் 4 கிலோ கஞ்சா மீட்பு
/
ரயில் தண்டவாள பாதையில் 4 கிலோ கஞ்சா மீட்பு
ADDED : பிப் 05, 2024 04:21 AM

திருவள்ளூர் : சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் - கடம்பத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே காய்ந்து போன செடிகளுடன் பார்சல் கிடப்பதாக நேற்று முன்தினம் மாலை திருவள்ளூர் இருப்புப்பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருவள்ளூர் இருப்பாதை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த பார்சலில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்திருக்கலாம் போலீசாரைக் கண்டதும் ரயிலிலிருந்து துாக்கி வீசியிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட கஞ்சாவை வியாசர்பாடியில் உள்ள போதை தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.

