/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அக்னி வீர் திட்டத்தில் ஆள் சேர்ப்பு முகாம்
/
அக்னி வீர் திட்டத்தில் ஆள் சேர்ப்பு முகாம்
ADDED : ஜன 23, 2025 08:49 PM
திருவள்ளூர்:இந்திய ராணுவத்தில் 'அக்னி வீர்' திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு முகாம், பிப்.5ல் காஞ்சிபுரத்தில் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய ராணுவத்தில் 'அக்னி வீர்' திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு முகாம், காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அருங்கில் வரும் பிப்.5 - 15 வரை நடக்கிறது. இதில், ராணுவ வீரர், நர்சிங் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கப்பட உள்ளது.
இதற்கான தகுதி, விபரத்தினை விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை முறையாக அறிந்து அதற்கு ஏற்றார் போல பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

