/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டு மனை பட்டா கேட்டு ரெட்டிப்பாளையத்தினர் போராட்டம்
/
வீட்டு மனை பட்டா கேட்டு ரெட்டிப்பாளையத்தினர் போராட்டம்
வீட்டு மனை பட்டா கேட்டு ரெட்டிப்பாளையத்தினர் போராட்டம்
வீட்டு மனை பட்டா கேட்டு ரெட்டிப்பாளையத்தினர் போராட்டம்
ADDED : ஜன 20, 2025 11:57 PM
பொன்னேரி, பொன்னேரி அடுத்த, பூங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் கிராமத்தில், 100க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இதே கிராமத்தில், ஆறு ஏக்கர் பரப்பில், அரசு புறம்போக்கு நிலம் மேற்கண்ட கிராமவாசிகளின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த நிலத்தின் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த, 150 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க, பொன்னேரி வருவாய்த் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, ரெட்டிப்பாளையம் கிராமத்தினர், பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது கிராமவாசிகள் கூறியதாவது:
எங்களது கிராமத்தில் உள்ளவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். தற்போது வேறு கிராமத்தினரை அங்கு குடியமர்த்த திட்டமிடுவதை ஏற்க முடியாது. எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிராமவாசிகளின் மனுக்கள் மீது, உரிய விசாரணை மேற்கொண்டு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.