/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி நகராட்சியில் சேதமான சிமென்ட் சாலைகளுக்கு விமோசனம் ரூ.13.27 கோடியில் பணி துவக்கம்
/
திருத்தணி நகராட்சியில் சேதமான சிமென்ட் சாலைகளுக்கு விமோசனம் ரூ.13.27 கோடியில் பணி துவக்கம்
திருத்தணி நகராட்சியில் சேதமான சிமென்ட் சாலைகளுக்கு விமோசனம் ரூ.13.27 கோடியில் பணி துவக்கம்
திருத்தணி நகராட்சியில் சேதமான சிமென்ட் சாலைகளுக்கு விமோசனம் ரூ.13.27 கோடியில் பணி துவக்கம்
ADDED : ஏப் 28, 2025 11:52 PM
திருத்தணி, திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 186 சிமென்ட் சாலை, 323 தார்ச்சாலை மற்றும் 44 மண் சாலைகள் என மொத்தம் 556 தெருக்கள் உள்ளன. நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீர்க்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், 2020ம் ஆண்டு, 110 கோடி ரூபாயில் திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் கொண்டு வருவதற்கு டெண்டர் விடப்பட்டு பணி துவங்கியது.
இதற்காக திருத்தணியில், 21 வார்டுகளிலும் ராட்சத குழாய்கள் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு, நகராட்சி மற்றும் மாநில சாலைகள் சேதப்படுத்தி குழாய்கள் அமைத்தனர்.
இதனால், நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருவதுடன் அடிக்கடி விபத்துகளில் சிக்கி தவித்தும் பலர் படுகாயம் அடைந்து வந்தனர்.
கடந்த, நான்கு மாதம் முன் நகராட்சியில், 21 வார்டுகளிலும் கூட்டுக்குடிநீர் பணிகள் முடித்து குடிநீர் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இதில், சேதம் அடைந்த குழாய் இடங்களை நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டறிந்து, சீரமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது கூட்டுக்குடிநீர் பணிகள் முழுமையாக முடிந்ததால் நகராட்சி நிர்வாகம் முதற்கட்டமாக சேதமடைந்த சிமெண்ட் சாலைகள் சீரமைப்பதற்கு அரசிடம் இருந்து, 13.27 கோடி ரூபாய் நிதி பெற்றது.
இதுகுறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
நகராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக முடிந்ததால் முதற்கட்டமாக, சேதமடைந்த, 186 சிமென்ட் சாலைகள் நகர்புற மேம்பாட்டு திட்டம், 2025-26 ம் ஆண்டின் கீழ், 13.27 கோடி ரூபாயில் சிமென்ட் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன.
அதாவது, 28.35 கி.மீ., துாரம் சிமென்ட் சாலைகள் சீரமைக்கப்படும். இப்பணிகளுக்கு நேற்று ஆன்-லைன் மூலம் டெண்டர் நடந்தது.
அடுத்த வாரம் முதல் பணிகள் துவங்கி, ஆறு மாதத்தி ற்குள் சாலைகள் சீரமைத்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்படும்.
மீதமுள்ள பழுதடைந்த தார்சாலைகளும் படிப்படியாக நிதியுதவி பெற்று சாலைகள் சீரமைக்கப்படும்.
அதே போல், நகராட்சியில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்கு, மொத்தம், 20 கோடி ரூபாய் தேவை என, தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்