/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவன் கடத்தல் விவகாரம் 5 பேருக்கு காவல் நீட்டிப்பு
/
சிறுவன் கடத்தல் விவகாரம் 5 பேருக்கு காவல் நீட்டிப்பு
சிறுவன் கடத்தல் விவகாரம் 5 பேருக்கு காவல் நீட்டிப்பு
சிறுவன் கடத்தல் விவகாரம் 5 பேருக்கு காவல் நீட்டிப்பு
ADDED : ஜூலை 10, 2025 09:31 PM
திருவள்ளூர்:திருவாலங்காடு சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு வரும் 24ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள களாம்பாக்கம் பகுதியில் காதல் திருமண விவகாரத்தில் 17 வயது சிறுவனை கடத்தியது தொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வனராஜ், 55, பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் மகேஸ்வரி, 48. புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார், 37, மணிகண்டன், கணேசன் உள்ளிட்ட ஐந்து பேரை, திருவாலங்காடு போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை, விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், கைது செய்யப்பட்ட வனராஜ் உள்ளிட்ட ஐந்து பேரையும் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி திருவள்ளூர் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் டி.எஸ்.பி, சுரேஷ்பாண்டியன் தலைமையில் இரு நாட்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப்பின் திருவள்ளூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஐந்து பேரையும் நீதிபதி சுனில் வினோத் வரும் 24ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து சென்னை புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.