/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் கால்வாய் கட்டும் பணிக்கு கும்மிடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
மழைநீர் கால்வாய் கட்டும் பணிக்கு கும்மிடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மழைநீர் கால்வாய் கட்டும் பணிக்கு கும்மிடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மழைநீர் கால்வாய் கட்டும் பணிக்கு கும்மிடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : மார் 15, 2024 09:28 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து துணை மின் நிலையம் வரையிலான ஜி.என்.டி., சாலை, மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ளது. அந்த சாலையின் இரு புறமும் சேர்த்து, 1,000 மீட்டர் நீள மழைநீர் வடி கால்வாய் அமைக்க, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சாலையோர ஆக்கிரமிப்புகள் இருந்ததால், கால்வாய் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
வீடுகள், கடைகள், வழிபாட்டு தலங்கள் என மொத்தம், 82 ஆக்கிரமிப்புகள் இருந்தன. அவற்றை அகற்ற போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. பலர் தாமாக முன் வந்து அகற்றிய நிலையில், அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் எஞ்சி இருந்தன.
அவற்றை இடித்து அகற்றும் பணிகளை மாநில நெடுஞ்சாலை துறையினர் நேற்று மேற்கொண்டனர். கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஜே.சி.பி., இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அனைத்து ஆக்கிரமிப்புகளும் இடிக்கப்பட்ட நிலையில், ஓரிரு நாட்களில் இடிபாடுகள் அகற்றப்படும் என, மாநில நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
l தேசிய நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து அரசியல் கட்சியினர் வைத்துள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பஞ்செட்டி முதல் எளாவூர் வரை சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கட்சி கொடிக் கம்பங்கள், அதன் கீழ் உள்ள கல்வெட்டுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நேற்று அகற்றினர்.
பஞ்செட்டி, தச்சூர், சிறுவாபுரி சந்திப்பு, புதுவாயல், கவரைப்பேட்டை, பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பு, எளாவூர் ஆகிய இடங்களில், தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த, 45 கட்சி கொடிக் கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் ஜே.சி.பி., கொண்டு இடிக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

