/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆதிவராகபுரம் கூட்டுச்சாலையில் நிழற்குடை, வேகத்தடை அகற்றம்
/
ஆதிவராகபுரம் கூட்டுச்சாலையில் நிழற்குடை, வேகத்தடை அகற்றம்
ஆதிவராகபுரம் கூட்டுச்சாலையில் நிழற்குடை, வேகத்தடை அகற்றம்
ஆதிவராகபுரம் கூட்டுச்சாலையில் நிழற்குடை, வேகத்தடை அகற்றம்
ADDED : ஜூன் 04, 2025 02:21 AM

ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில், ஆதிவராகபுரம் கூட்டுச்சாலை அமைந்துள்ளது. இந்த கூட்டுச்சாலையில் இருந்து 1 கி.மீ., தொலைவில் ஆதிவராகபுரம் கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராமத்தில் இருந்து பிரதான சாலைக்கு நடந்து வரும் பகுதிவாசிகள், கூட்டுச்சாலையில் இருந்து ஆர்.கே.பேட்டை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கருக்கு பேருந்து வாயிலாக பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த கூட்டுச்சாலையில் சேதமடைந்த பயணியர் நிழற்குடை ஓராண்டுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. ஆனால், மீண்டும் கட்டப்படவில்லை. சில மாதங்களுக்கு முன் கூட்டுச்சாலையில் வேகத்தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
வேகத்தடைகள் அமைத்த பின், இப்பகுதியில் விபத்துகள் அதிகரித்தன. இதனால், உடனடியாக வேகத்தடைகள் அகற்றப்பட்டன. ஆனால், வேகத்தடை குறித்த எச்சரிக்கை பதாகைகள் அகற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்கின்றன.
இந்த எச்சரிக்கை பலகைகளை பார்க்கும் வாகன ஓட்டிகள், வேகத்தை குறைத்து ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் சாலையை கடந்து இணைப்பு சாலையில் பயணிக்க தவித்து வருகின்றனர்.
எனவே, இப்பகுதியில் மைய தடுப்புகள் ஏற்படுத்தவும், மீண்டும் பயணியர் நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.