/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளவி கூடு அகற்றம்: மக்கள் நிம்மதி
/
குளவி கூடு அகற்றம்: மக்கள் நிம்மதி
ADDED : அக் 25, 2025 11:08 PM

திருவாலங்காடு: மாமரத்தில் கட்டப்பட்ட விஷக்குளவி கூட்டை, பேரம்பாக்கம் தீயணைப்பு துறையினர் அகற்றியதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையில், 2,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, பூஞ்சோலை நகரில் உள்ள நாகராஜ் என்பவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள மாமரத்தில், விஷ குளவிகள் கூடு கட்டியிருந்தன. இக்கூட்டில் 100க்கும் மேற்பட்ட குளவிகள் இருந்தன.
ஒரே நேரத்தில், நுாற்றுக்கணக்கான குளவிகள் கூட்டை விட்டு வெளியேறியதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வந்தனர். இதுகுறித்து, பேரம்பாக்கம் தீயணைப்பு துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நேற்று, மருந்து தெளித்தும், தீ வைத்தும் விஷக்குளவி கூட்டை அகற்றினர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

