/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'டெங்கு' காய்ச்சல் பரவலை தடுக்க தேவையற்ற பொருளை அகற்றுங்கள்
/
'டெங்கு' காய்ச்சல் பரவலை தடுக்க தேவையற்ற பொருளை அகற்றுங்கள்
'டெங்கு' காய்ச்சல் பரவலை தடுக்க தேவையற்ற பொருளை அகற்றுங்கள்
'டெங்கு' காய்ச்சல் பரவலை தடுக்க தேவையற்ற பொருளை அகற்றுங்கள்
ADDED : நவ 28, 2024 08:17 PM
திருவள்ளூர்:'டெங்கு' காய்ச்சல் பரவலை தடுக்க வீடுகளைச் சுற்றிலும் தேவையற்ற பொருட்களை அகற்ற கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பருவமழை பெய்வதால், நம்மால் துாக்கி எறியப்பட்ட பழைய பாத்திரம், பூந்தொட்டிகளில் நீர் தேங்கி டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர காரணமாகி விடுகிறது.
துாக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருள், பழைய பொம்மை, பாட்டில், உடைந்த பாத்திரம் போன்ற பொருட்களை பொதுவெளியில் போட்டு வைப்பதால், டெங்கு பரப்பும் சூழலை நாம் உருவாக்கி விடுகிறோம்.
வீட்டை சுற்றிலும் பழைய பொருட்கள், தேவையில்லாத நீர்த்தேக்க பாத்திரங்கள் வைத்திருப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மேலும், டயர், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டி, நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டி போன்றவற்றில் தேங்கும் நீரில் உருவாகும் 'ஏடிஸ்' கொசுக்களால் டெங்கு வைரஸ் உருவாகிறது.
மேலும், சாதாரண சளி, காய்ச்சல் ஓரிரு நாட்களில் குணமாகிவிடும் மலேரியா, டெங்கு, டைபாய்டு மற்றும் எலி காய்ச்சல்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
டெங்கு கொசுவால் ஏற்படும் காய்ச்சல் நோய்க்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

