/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளத்தை புதுப்பித்தும் பயனில்லை மீண்டும் ஆக்கிரமித்த செடிகள்
/
குளத்தை புதுப்பித்தும் பயனில்லை மீண்டும் ஆக்கிரமித்த செடிகள்
குளத்தை புதுப்பித்தும் பயனில்லை மீண்டும் ஆக்கிரமித்த செடிகள்
குளத்தை புதுப்பித்தும் பயனில்லை மீண்டும் ஆக்கிரமித்த செடிகள்
ADDED : ஜூலை 05, 2025 11:24 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட இரு கோவில் குளங்கள், கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்ட நிலையில், முறையாக பராமரிக்காததால் மீண்டும் செடிகள் வளர்ந்துள்ளன.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஏகவள்ளி அம்மன் கோவில் மற்றும் முக்கோட்டீஸ்வரர் கோவில் குளங்கள், பல ஆண்டுகளாக துார்ந்து, செடிகள் வளர்ந்து சிதிலமடைந்து இருந்தன.
இதையடுத்து, இரு குளங்களையும் துார் எடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, 'அம்ருத் - 2.0 மற்றும் நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், கடந்தாண்டு 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, கோவில் குளங்களை துார் எடுத்து, படித்துறை, நடைபாதை, சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தப்பட்டன. எட்டு மாதங்களுக்கு முன் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், முறையான பராமரிப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது குளத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. எனவே, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், இரு கோவில் குளங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.