/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடைந்த சாலைகள்: சீரமைப்பு பணி துவக்கம்
/
சேதமடைந்த சாலைகள்: சீரமைப்பு பணி துவக்கம்
UPDATED : டிச 25, 2025 08:08 AM
ADDED : டிச 25, 2025 06:49 AM
திருத்தணி: திருத்தணி நகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.
திருத்தணி நகராட்சியில் சேதமடைந்த கான்கிரீட் சாலைகள், 13.50 கோடி ரூபாயில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், சேதமடைந்த தார்ச்சாலைகளுக்கு நிதியுதவி ஒதுக்காததால், பல்வேறு இடங்களில் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாத சாரிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் அதிகளவில் சேதமடைந்த தார்ச்சாலைகளை, தற் காலிகமாக சீரமைப்பதற்கு, 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
தற்போது, என்.எஸ்.சி., போஸ் சாலை, முருக்கப்ப நகர் செல்லும் சாலை, நல்லதண்ணீர் குளம் உட்பட 15 சாலைகளை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. இப்பணிகள், 20 நாட்களில் முடிக்கவும் நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

