/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமான குடிநீர் குழாய்கள் சீரமைப்பு பணிகள் துவக்கம்
/
சேதமான குடிநீர் குழாய்கள் சீரமைப்பு பணிகள் துவக்கம்
சேதமான குடிநீர் குழாய்கள் சீரமைப்பு பணிகள் துவக்கம்
சேதமான குடிநீர் குழாய்கள் சீரமைப்பு பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 11, 2025 09:44 PM
பள்ளிப்பட்டு,:கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்ட, உடைப்பை சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
கொசஸ்தலை ஆற்றில் இருந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஒன்றியங்களுக்கு, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்ய, ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதற்காக, பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரமாக மண்ணில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள், சில இடங்களில் சேதம் அடைந்துள்ளன.
இவற்றை கண்டறிந்து சீரமைக்கும் பணியில், சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நொச்சிலி கூட்டுச் சாலையில் பழுதடைந்திருந்த குழாய்களை சீரமைத்தனர். நேற்று முன்தினம், கர்லம்பாக்கம் பகுதியில் சாலையோரம் உடைந்திருந்த குழாய்களை மாற்றி, புதிதாக அமைத்தனர்.
தண்ணீரின் அழுத்தம் காரணமாக குழாய்கள் சேதமாகிறதா அல்லது சாலையில் செல்லும் கனரக வாகனங்களின் பாரம் தாங்காமல் சேதமடைகிறதா என ஆய்வு செய்ய வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

