/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மயிலாடும்பாறைக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
/
மயிலாடும்பாறைக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
மயிலாடும்பாறைக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
மயிலாடும்பாறைக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : நவ 26, 2025 04:57 AM
ஆர்.கே.பேட்டை: மயிலாடும்பாறைக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியராமாபுரம், செங்கட்டானுார், மயிலாடும்பாறை, பைவலசா, கட்டாரிகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இந்த பகுதியில் காய்கறி மற்றும் கீரை வகைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. பெருமளவில் பயிரிடும் விவசாயிகள், சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளை லாரிகளில் அனுப்பி வைக்கின்றனர்.
அதே நேரத்தில் சிறுவிவசாயிகள், அருகில் உள்ள சோளிங்கர் தினசரி காய்கறி சந்தைக்கு தங்களின் வயலில் விளையும் காய்கறிகளை கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதற்கு, இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் அரசு பேருந்த தடம் எண்: டி52 போதுமானதாக இல்லை. எனவே இந்த மார்க்கத்தில் கூடுதல் நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

