/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேட்டுப்பாளையம் - திருவெள்ளவாயல் தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை
/
மேட்டுப்பாளையம் - திருவெள்ளவாயல் தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை
மேட்டுப்பாளையம் - திருவெள்ளவாயல் தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை
மேட்டுப்பாளையம் - திருவெள்ளவாயல் தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : நவ 04, 2024 01:54 AM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையத்தில் இருந்து, முறிச்சம்பேடு, அனுப்பம்பட்டு, தேவதானம், காணியம்பாக்கம், வேளூர் ஆகிய கிராமங்கள் வழியாக திருவெள்ளவாயல் செல்லும் வழித்தடத்தில், 30 ஆண்டுகளுக்கு முன், அரசு பேருந்து தடம் எண். 95இ இயக்கப்பட்டு வந்தது.
சாலை சரியில்லை, பேருந்துகள் பற்றாக்குறை, வருவாய் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, இந்த பேருந்து சேவை மேற்கண்ட வழித்தடத்தில் நிறுத்தப்பட்டது.
பேருந்து சேவை இல்லாததால் இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் அத்யாவசிய தேவைகளுக்கு பொன்னேரி, மீஞ்சூர் சென்று வருவதற்கு பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வடஸ்ரீரங்கம் எனப்படும் தேவதானம் ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில், 30 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடர வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.