/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமான தரைப்பாலம் அகற்ற கோரிக்கை
/
சேதமான தரைப்பாலம் அகற்ற கோரிக்கை
ADDED : நவ 22, 2024 01:11 AM

பாண்டூர்:பூண்டி ஒன்றியம் பட்டரைப்பெரும்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது நாராயணபுரம் கிராமம். இங்கு கொசஸ்தலையாற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன் வாகன போக்குவரத்துக்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து மாற்று பாதை அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.
தற்போது சேதமடைந்த தரைப்பாலம் வழியாக அப்பகுதிவாசிகள் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்திலும் நடந்தும் சென்று வருகின்றனர்.
இதனால் தரைப்பாலம் விழுந்து விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.