/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழமையான குளத்தை சீரமைக்க கோரிக்கை
/
பழமையான குளத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 17, 2024 01:40 AM

திருவாலங்காடு,
திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சியில் திருத்தீஸ்வரர் கோவில் எதிரே அமைந்துள்ளது ஊரணி குடிநீர் குளம்.
700 ஆண்டுகள் பழமையான இந்த குளம் மணவூர்சுற்றுவட்டார பகுதிமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்ததோடு, நிலத்தடி நீர் மட்டத்தை சீராக வைத்திருக்க காரணமாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குளத்தின் படிகள் உடைந்ததால் குளத்து நீரை மக்கள் பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தனர்.
பயன்பாடு குறைந்ததால் துார்ந்து போய் குளத்தில் செடிகள் முளைத்து தற்போது மழைபெய்தாலும் நீர் தேங்கு வதில்லை.
பழமை வாய்ந்த இந்த ஊரணி குடிநீர் குளம்பாழடைந்து வருவதை தடுக்கவும், சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.