/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இருளிப்பட்டு - ஆண்டார்குப்பம் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
இருளிப்பட்டு - ஆண்டார்குப்பம் சாலையை சீரமைக்க கோரிக்கை
இருளிப்பட்டு - ஆண்டார்குப்பம் சாலையை சீரமைக்க கோரிக்கை
இருளிப்பட்டு - ஆண்டார்குப்பம் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 09, 2024 01:27 AM

பொன்னேரி:சோழவரம் அடுத்த இருளிப்பட்டு கிராமத்தில் இருந்து நெடுவரம்பாக்கம் வழியாக ஆண்டார்குப்பம் செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சாலை முழுதும் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, சரளை கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. மழை பெய்தால், பள்ளங்களில் மழைநீர் சிறு சிறு குட்டைகளாக தேங்கி நிற்கிறது. அவ்வப்போது பள்ளங்களை மூடுவதற்காக கொட்டப்படும் சாம்பல் கழிவுகளால் சாலை சகதியாக மாறுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். கார் மற்றும் பள்ளி வேன்கள் பள்ளங்களில் சிக்கி தவிக்கினறன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து சிறு சிறு காயங்களுக்கு உள்ளாகின்றனர். இந்த சாலை, 10ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது.
சோழவரம் ஒன்றிய நிர்வாகத்தின் கீழ், அழிஞ்சிவாக்கம், நெடுவரம்பாக்கம், ஆண்டார்குப்பம் ஆகிய ஊராட்சிகளை இணைக்கும், 3 கி.மீ., சீரமைக்கப்படாமல் இருப்பது கிராமவாசிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
உரிய நிதி ஒதுக்கீடு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.