/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேளூரில் பராமரிப்பு இல்லாத பாலத்தை சீரமைக்ககோரிக்கை
/
வேளூரில் பராமரிப்பு இல்லாத பாலத்தை சீரமைக்ககோரிக்கை
வேளூரில் பராமரிப்பு இல்லாத பாலத்தை சீரமைக்ககோரிக்கை
வேளூரில் பராமரிப்பு இல்லாத பாலத்தை சீரமைக்ககோரிக்கை
ADDED : அக் 19, 2024 12:45 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த வேளூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரிக்கு மழைநீர் கொண்டு வரும் கால்வாயும், அதன் குறுக்கே உள்ள பாலமும் பராமரிப்பு இன்றி உள்ளது.
கால்வாய் முழுதும் புதர் மண்டி உள்ளது. கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டு உள்ள சிறுபாலத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டும், கட்டுமானங்களில் சிமென்ட் பூச்சுகள் கொட்டியும் உள்ளன.
விரிசல் உள்ள பகுதிகளில் செடிகள் வளர்ந்து உள்ளன. பாலத்தின் வழியாக மழைநீர் செல்லும் துவாரங்களை செடிகள் மற்றும் குப்பையால் துார்ந்து உள்ளது.
இதனால் மழைக்காலங்களில் மழைநீர் ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. கால்வாய் மற்றும் பாலம் பராமரிப்பு இன்றி உள்ளது வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
துரித நடவடிக்கையாக, மேற்கண்ட கிராமத்தில் கால்வாயை துார்வாரி சீரமைக்கவும், மழைநீர் சீராக செல்லும் வகையில் பாலத்தை புதுப்பிக்கவும் வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.