/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் காவல் நிலையம் ஆவடி கமிஷனரிடம் கோரிக்கை
/
பழவேற்காடில் காவல் நிலையம் ஆவடி கமிஷனரிடம் கோரிக்கை
பழவேற்காடில் காவல் நிலையம் ஆவடி கமிஷனரிடம் கோரிக்கை
பழவேற்காடில் காவல் நிலையம் ஆவடி கமிஷனரிடம் கோரிக்கை
ADDED : நவ 28, 2025 03:30 AM
பழவேற்காடு: பழவேற்காடில், 30 மீனவ கிராம மீனவர்கள், சுற்றுலாப்பயணியர் பாதுகாப்பு கருதி, புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என ஆவடி கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.
பழவேற்காடு மீனவப்பகுதியில், 30 மீனவ கிராமங்களில், 38,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள மீனவர்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
மீன்பிடி தொழில் செய்யும்போது, அவ்வப்போது மீனவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. இவர்கள் புகார் அளிக்க, பிரச்னைகளுக்கு தீர்வு காண, 10 கி.மீ., தொலைவில் உள்ள திருப்பாலைவனம் காவல் நிலையம் செல்ல வேண்டும்.
அதேபோன்று பழவேற்காடு சுற்றுலாப்பகுதியாக இருப்பதால், வாரவிடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணியர் வருகின்றனர்.
அவர்களை கண்காணிப்பது, பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பணிகளும் திருப்பாலைவனம் போலீசாரே கவனிக்க வேண்டும்.
பழவேற்காடு பகுதிக்கு என தனிக்காவல் நிலையம் அமைத்து, மீனவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாபட்டு சங்கம் சார்பில், ஆவடி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

