/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 05, 2025 02:40 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு அடுத்த மஞ்சாகுப்பம் ஊராட்சியில் அரசு நடுநிலை பள்ளி, 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இங்கு, 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். திருவள்ளூர் -- அரக்கோணம் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பள்ளியில், சுற்றுச்சுவர் சேதமடைந்து உள்ளது.
இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பாதுகாப்பு இல்லாத காரணத்தால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றனர்.
எனவே, சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைவதை கட்டுப்படுத்தும் விதமாகவும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், சேதம் அடைந்துள்ள சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.