/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆற்றங்கரையோரம் அரசு பள்ளி தடுப்பு சுவர் கட்ட வேண்டுகோள்
/
ஆற்றங்கரையோரம் அரசு பள்ளி தடுப்பு சுவர் கட்ட வேண்டுகோள்
ஆற்றங்கரையோரம் அரசு பள்ளி தடுப்பு சுவர் கட்ட வேண்டுகோள்
ஆற்றங்கரையோரம் அரசு பள்ளி தடுப்பு சுவர் கட்ட வேண்டுகோள்
ADDED : செப் 26, 2025 04:05 AM

பள்ளிப்பட்டு:ஆற்றங்கரையோரம் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கருதி, கரையோரத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் சங்கீதகுப்பம் கிராமத்தை ஒட்டி லவா ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் கரையோரம், அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது.
பள்ளியின் நுழைவாயிலை ஒட்டி, லாவ ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ள தரைபாலம் வழியாக, கிராமத்தினர் பள்ளிப்பட்டுக்கு வந்து செல்கின்றனர். கிராமத்தின் நுழைவாயிலாக அமைந்துள்ள இந்த தரைப்பாலத்தை ஒட்டி, ஆற்றின் கரைகள் வலுவிழந்துள்ளன. மேலும், மாணவ- மாணவியர் பள்ளிக்கு செல்லும் வழியில், ஆற்றங்கரைக்கு வரவும் வாய்ப்பு உள்ளது. இதனால், விபரீதம் ஏற்படும் சூழல் உள்ளது.
மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கருதி, தரைப்பாலத்தை மேம்பாலமாக உயர்த்தி கட்ட வேண்டும், பள்ளி வளாகத்தை ஒட்டி ஆற்றங்கரையில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.