/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்வாய்கண்டிகை சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
/
தேர்வாய்கண்டிகை சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
தேர்வாய்கண்டிகை சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
தேர்வாய்கண்டிகை சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 28, 2025 03:04 AM

கும்மிடிப்பூண்டி,:தேர்வாய்கண்டிகையை இணைக்கும் சாலையில் உள்ள பாலத்தை உயர்மட்ட பாலமாக்க வேண்டும் என, கிராம மக்களும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் உள்ளது. நீர்தேக்கத்தில் இருந்து தேர்வாய்கண்டிகை கிராமத்திற்கான சாலை பிரியும் இடத்தில், கால்வாய் மீது சிறு பாலம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது, பாலத்தை மூழ்கடித்து மூன்று அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
அப்போது, அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாவது நடந்து வருகிறது.
மேலும், கால்வாயில் உபரி நீர், சீராக செல்லாமல், தேர்வாய் கிராமத்திற்கு உட்பட்ட வயல் வெளியில் பாய்வதால், பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்படும்.
கிராம மக்கள் மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிலாளர்கள் நலன் கருதி, அந்த இடத்தில், மேம்பாலம் போன்று உயர்மட்ட, இரு வழி பாலம் அமைக்க வேண்டும்.
மழை வெள்ளம் சீராக செல்ல, மேம்பாலத்தை ஒட்டிய பகுதியில் கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நீர்வளத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.