/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துணைமின் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
துணைமின் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
துணைமின் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
துணைமின் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : மார் 25, 2025 07:41 AM

திருத்தணி : திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை - நொச்சிலி மாநில நெடுஞ்சாலையில், 110 கி.வோ., கொண்ட துணை மின்நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து புச்சிரெட்டிப்பள்ளி, மத்துார், கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம், எஸ்.அக்ரஹாரம் உட்பட, 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், துணைமின் நிலையம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இந்த வளாகத்தில் செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் அதிகளவில் சுற்றி வருகின்றன. மேலும், துணை மின்நிலையத்திற்கு சுற்றுச்சுவர் முறையாக அமைக்காததால், துணைமின் நிலையத்தில் மின் உபகரணங்கள் அடிக்கடி திருடு போகின்றன.
குறிப்பாக, கே.ஜி.கண்டிகை - நொச்சிலி சாலையில் சுற்றுச்சுவர் இல்லாததால், கால்நடைகள் அடிக்கடி உள்ளே நுழைந்து விடுகிறது. மேலும், இரவு நேரத்தில் மர்மநபர்கள் சுற்றித்திரிவதும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் கே.ஜி.கண்டிகை துணை மின்நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து, வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.