sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பெரும்பேடு தரைப்பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

/

 பெரும்பேடு தரைப்பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

 பெரும்பேடு தரைப்பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

 பெரும்பேடு தரைப்பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை


ADDED : ஜன 19, 2026 05:56 AM

Google News

ADDED : ஜன 19, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: பெரும்பேடு - வஞ்சிவாக்கம் சாலையில், மழைநீர் கால்வாய் குறுக்கே உள்ள தரைப்பாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் இருந்து வஞ்சிவாக்கம், ஆசானபூதுார், அச்சரப்பள்ளம் கிராமங்களுக்கு செல்லும் சாலையில், ஆரணி ஆற்றிற்கு மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

இந்த தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்திற்கு ஆளாகின்றனர். கால்வாயில் மழைநீர் நிரம்பி இருப்பதால், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.

செவ்வாய்க்கிழமைகளில் பெரும்பேடு முத்துகுமாரசுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இந்த தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.

எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்க, தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us