/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழாகும் சுகாதார நிலையம் நுாலகமாக மாற்ற கோரிக்கை
/
பாழாகும் சுகாதார நிலையம் நுாலகமாக மாற்ற கோரிக்கை
ADDED : செப் 21, 2025 11:55 PM

பள்ளிப்பட்டு:ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கிய பின் கைவிடப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடத்தை, நுாலகமாக மாற்ற வேண்டும் என, வெளிகரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் வெளிகரம் கிராமத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெளிகரம், வெளிகரம் காலனி, இருதலைவாரிபட்டடை, சங்கீதகுப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று சென்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததும், வெளிகரம் துணை சுகாதார நிலையம் கைவிடப்பட்டது.
தற்போது பயனின்றி வீணாகி வரும் துணை சுகாதார நிலைய கட்டடத்தை, நுாலகமாக செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த கட்டடத்தை ஒட்டி அரசு தொடக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நுாலகமாக செயல்படுத்தினால், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பகுதி மக்கள் பயனடைவர் என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.